ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி டெல்லி தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட மற்றும் வந்த செலவுக்காக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. பவர் ஸ்டார் சீனிவாசன் மீது இதேபோல மோசடி வழக்கு சென்னையில் 6 இருப்பதும் தெரிய வந்துள்ளது