விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ சுருக்கமாக ‘LIK’. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர், டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், படத்தின் OTT உரிமை இன்னும் விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக  ‘LIK’ படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப் போகும் சூழல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே படத்தின் OTT உரிமை விற்பனையாகவில்லை என்றாலும், குறிப்பிட்டபடி, டிசம்பர் 18ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி அடுத்தமாதம் ‘LIK’ திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். லவ் டுடே, டிராகன், டியூட் படங்களை தொடர்ந்து வெளியாக உள்ள ‘LIK’ திரைப்படமும் பிரதீப் ரங்கநாதனின் வெற்றிப் பட வரிசையில் இடம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சயின்ஸ் பிக்ஷன் கதைக்களம் என கூறப்படுவதால்,  ‘LIK’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version