தமிழ் சினிமாவில் ஃபீல் குட் படமாக சமீபத்தில் வருவது என்பது மிகவும் அரிதாக உள்ளது. சிறிய பட்ஜெட்டில் அதிக லாபம் எடுத்த படங்கள் வரிசையில் இணைந்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. கடந்த மே 1-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இலங்கையிலிருந்து கடல் மூலமாக தமிழ்நாடு வந்தவர்கள் எப்படி அவர்களை இங்கு தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
குடும்ப கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.75கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இப்படத்தின் வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்தையே பின் தள்ளியது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமௌலி, நானி, கிச்சா சுதீப் என பலரும் இப்படத்தை பாராட்டினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்..
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அபிஷன், சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நான் சினிமாவில் வந்ததற்காக முழு பயனையும் அடைந்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.