நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
“சந்திரமுகி” படத்தில் ஜோதிகா நடித்த முக்கியமான கதாபாத்திரத்தை, ஆரம்பத்தில் நான் செய்ய வேண்டியதுதான். ஆனால், குடும்ப காரணங்களால் அந்த வாய்ப்பை விட்டு விலக வேண்டி வந்தது. அதனால் ரஜினிகாந்த் சார் உடன் நடிக்கும் வாய்ப்பு என்னிடம் அந்த நேரத்தில் தவறி போனது,” என்று கூறியுள்ளார் சிம்ரன்.
அதன் பின்னர், “பேட்டை” திரைப்படம் மூலம் ரஜினிகாந்த் சார் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றும் கூறினார்.
சிம்ரனின் இந்த தகவல் தற்போது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.