வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயனின் கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அமரன், மதராஸி திரைப்படங்களைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்தநிலையில், விஜயின் 68வது படமான GOAT-க்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் மீண்டும் வெங்கட் பிரபு இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணி அமைய உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது. இதுபற்றி அண்மையில் பேசிய வெங்கட் பிரவு, சிவகார்த்திகேயனுடனான படம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும் என்றார். தயாரிப்பு நிறுவனத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கம் கதை மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். இந்த திரைப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.
இந்தநிலையில், வெங்கட் பிரபு படத்திற்கான சிவகார்த்திகேயனின் புதிய கெட்டப் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
