மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”இந்தியாவிற்கு என்ன ஒரு மகிமையான தருணம்!
எங்கள் நீல நிற பெண்கள் தைரியம், கருணை மற்றும் சக்தியை மறுவரையறை செய்து, வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் அச்சமற்ற, உடைக்க முடியாத மனப்பான்மையுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார்.
