நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ளார். முதன்முதலாக இயக்குநராக அவர் அறிமுகமாக உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தில் நாயகனாக சந்தீப் நடித்துள்ளார். ஃபரீயா அப்துல்லா, ராஜூசுந்தரம், சம்பத்ராஜ், அன்புதாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகி உள்ள ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
