Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»63 வயதில் கௌரவ ஆஸ்கர் விருதினை வென்ற மிஷன் இம்பாசிபிள் புகழ் டாம் குரூஸ்
    சினிமா

    63 வயதில் கௌரவ ஆஸ்கர் விருதினை வென்ற மிஷன் இம்பாசிபிள் புகழ் டாம் குரூஸ்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tom Cruise Governors Awards Main 2025
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹாலிவுட் என்ற வார்த்தையை நினைவு கூறும் பொழுது அதிலும் குறிப்பாக சண்டை காட்சிகள் என்று வந்துவிட்டால் டாம் குரூஸின் பெயர் நிச்சயம் அனைவரது எண்ணத்திலும் வந்து நிற்கும். பார்க்கும் பார்வையாளர்கள் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சண்டைக் காட்சி உண்மையில் தத்ரூப வடிவமா அல்லது ஏதேனும் கிராபிக்ஸ் வடிவமா என்று யோசிக்கும் அளவிற்கு எந்தவித டூப்பும் இல்லாமல் தன் உயிரை பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டும் கெட்டிக்காரர்.

    பொதுவாக நடிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 63 வயதான டாம் குரூஸின் பெயர் இதுவரை நான்கு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை மற்றும் ஜெரி மகுயர் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், மேக்னோலியா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், டாப் கன்:மாவெரிக் திரைப்படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்காகவும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    1981 முதல் தற்பொழுது வரை அசராமல் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு நேற்று (நவம்பர் மாதம் 16ஆம் தேதி, 2025) ஞாயிற்றுக்கிழமை இரவு அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. விருதினை வென்ற டாம் குரூஸ், “நாம் எங்கிருந்து வந்தாலும் திரையரங்கம் என்று வந்துவிட்டால் அங்கே நாம் ஒன்றாக சிரிக்கிறோம், ஒன்றாக உணர்கிறோம், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் ஒன்றாக நம்புகிறோம். அதுவே கலை வடிவின் சக்தி. திரைப்படங்களை உருவாக்குவது நான் செய்யும் வேலை அல்ல, திரைப்படங்களை உருவாக்குவது தான் நான், அதுவே என் வாழ்க்கை” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

    https://x.com/kylebuchanan/status/1990285360136626274?t=CcTJZ_soRjlSOEnx-8_XfA&s=19

    கௌரவ ஆஸ்கார் விருதினை நான்கு முறை ஆஸ்கார் விருதை வென்ற புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குனரான அலஜென்ரோ கோன்சலாஸ் இன்னாரிடு கையினால் டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார்.

    Picsart 25 11 17 22 10 07 494

    தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொதுக்கூட்டங்கள் பரப்புரைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உகந்ததல்ல – சிபிஐஎம் சண்முகம் குற்றச்சாட்டு
    Next Article கொடைக்கானலில் கமல்ஹாசன் – டிரெண்டிங் ‘பெப்பர் அருவி’ சாலையில் உலா
    Editor TN Talks

    Related Posts

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.