மதுரை பின்னணி கொண்ட கதைக்களத்தில் நடிகர் ஜீவாவின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜீவாவின் தந்தையும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரி அண்மையில் விபத்து ஒன்றில் காலமானார். இந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்தநிலையில், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் ஜீவா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘கிடா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இந்தப் படத்தை இயக்க உள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்ட விறுவிறுப்பான கதைக் களத்தில்  ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாமன், கருடன் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், இந்த ஆண்டிலேயே இந்த படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரா. வெங்கட்டின் முந்தைய படைப்பான ‘கிடா’ எதார்த்தமான கதையம்சத்திற்காகப் பாராட்டுக்களைப் பெற்றிருந்ததால், இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version