Author: Editor web1

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் சீனி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 28) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டாசு ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆலை மூடப்பட்டிருந்தநிலையில், அறைகளில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின. வெண்மை நிற புகையுடன் வானில் பரவிய சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து அறைகள் வெடித்ததைக் கண்டு, அருகில் உள்ள கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டன. ரசாயனப் பொருள்களில் ஏற்பட்ட திடீர் வேதியியல் மாற்றம் காரணமாக இந்த வெடி…

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு நடைப்பெற உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலும் இருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, நாளை (ஜூன் 29) மற்றும் நாளை மறுதினம் (ஜூன் 30) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது. நாளை (ஜூன் 29) காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதில், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்…

Read More

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை ஆகிய 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில்…

Read More

போர் சூழல் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை காக்க தங்க வாங்குவதை தவிர்க்குமாறு விடுத்த அழைப்பை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தனது 135-வது ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு ஆசியப் போர் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைத் காக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் உள்ளிட்ட பொருள்களை ஓராண்டிற்கு வாங்க வேண்டாம் கூறியதை கூட்டிக்காட்டினார். தனது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துப் பாராட்டினார். தனது வேண்டுகோளை ஏற்று மக்கள் தங்கம் வாங்காமல் இருந்தது, தேசத்தின் மீதான அவர்களின் பொறுப்புணர்வை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களது வீட்டுத் திருமண நிகழ்வுகளுக்குக் கூட தங்கம் வாங்காமல் தவிர்த்துள்ளதாகவும், சிலர் தேவைக்காகத் தங்களின் பழைய தங்கத்தை மட்டுமே மாற்றிப் புதிய தங்கம் வாங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி…

Read More

இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைப்பதாகவும், அதனை பாதுகாப்பதில் இருநாடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 28ம் தேதி மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் பிரிக்கவில்லை, மாறாக அது இரு நாடுகளையும் இணைக்கிறது என்றார். நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இப்பெருங்கடல் செயல்படுவதா அவர் தெரிவித்தார். செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவின் 140 கோடி மக்களின் வாழ்த்துகளை அங்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இருநாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும்  அர்ப்பணிப்பு ஒரே புள்ளியில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தான் பிரதமராகப்…

Read More

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்பதால் தயாராக இருக்குமாறு தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். தொழில்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவுடன்தான் தற்போதைய தவெக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், இன்னும் 6 மாதங்களில் கூட எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை, பாதாளத்திற்குச் செல்வதைத் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த ஸ்டாலின், மக்களின்…

Read More

‘சூர்யா 47’ படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூர்யா 47’ படத்தின் தலைப்பு குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தநிலையில், படம் குறித்து தெரிவித்துள்ள இயக்குனர் ஜித்து மாதவன், திரைப்படத்தை ரசிகர்களுக்கு எந்த விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதால், படத்தின் முதல் போஸ்டர் கூட இன்னும் வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் மற்றும் சூர்யா 47 படங்களில் கவனம் செலுத்தினார். இந்தநிலையில், வெங்கட் அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திருப்பூரில் YouTube வீடியோக்களைப் பார்த்துவிட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற இளம்பெண் ஒருவர் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு ஏற்கனவே முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்நிலையில், தனது இரண்டாவது குழந்தையை முற்றிலும் இயற்கையான முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று சசிகலா விரும்பியதாக தெரிகிறது. இதற்காக அவரும், அவரது கணவர் மற்றும் மாமியாரும் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்ப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. மருத்துவ கண்காணிப்பு இல்லாமல், YouTube-ல் பிரசவம் பார்ப்பது குறித்த வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்துவிட்டு, ஜூன் 25 வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். பிரசவத்தின் போது குழந்தை பாதுகாப்பாக வெளியே வந்த போதிலும், நஞ்சுக்கொடி சரியாக பிரியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் சசிகலாவிற்கு கடுமையான மற்றும் கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு…

Read More

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை அவர்களின் அசல் பணிகளைத் தவிர்த்து, அலுவலகப் பணிகள் போன்ற இதர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) அனைத்து கிளை மேலாளர்களுக்கும் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, அரசுப் போக்குவரத்து கழகங்களில் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தங்களின் அசல் பணியைச் செய்யாமல், அலுவலக உதவியாளர்களாகவும், தொழிற்சங்கப் பணிகளிலும் முழுச் சம்பளத்துடன் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனால் பேருந்துகளை இயக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நிலை உருவானதாக தெரிகிறது. இதனை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், இதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு உத்தரவிட்டது. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் எந்த நோக்கத்திற்காக வேலைக்கு எடுக்கப்பட்டார்களோ, அந்தப் பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அவர்களை எந்தக் காரணம் கொண்டும்…

Read More

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சபரீசன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருகனும், அரசியல் ஆலோசகருமான சபரீசனுக்கு எதிராக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபரீசன் சார்பில் அமைச்சர்கள் இருவருக்கும் வக்கீர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் தன் மீதும் அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது என்று சபரீசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய, உண்மைக்கு புறமான கருத்துகளை இரண்டு அமைச்சர்களும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவதூறு கருத்துகள் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அமைச்சர்களும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்;  மன்னிப்பு கேட்க வேண்டும்; வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்காலத்தில் அவதூறு  கருத்துகளை வெளியிட…

Read More