எனது தலைப்பை சூட்டுவதற்கு பட நிறுவனங்கள் என்னிடம் அனுமதி கேட்பது நாகரிகம் ஆகாதா? – வைரமுத்து
எனது பல்லவியில் இருந்து எத்தனையோ தலைப்புகள் உருவாகி இருக்கின்றன
எனது வார்த்தைகள் படத்தின் பெயர் ஆனதற்கு நான் இதுவரை என்றுமே கேள்வி கேட்டதில்லை
எனது தலைப்பை பயன்படுத்துவதற்கு கூட இதுவரை யாரும் என்னிடம் ஒரு மரியாதைக்கு கூட கேட்டதில்லை
செல்வம் பொதுவுடமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என்பதில் அகமகிழ்வேன்
ஏன் என்னை கேட்காமல் பயன்படுத்தினீர்கள் என கேட்பது எனக்கு நாகரீகம் இல்லை
டூரிஸ்ட் பேமிலி படத்தில் மலையூர் மம்பட்டியான் பாடல் வைப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்கப்பட்டதா என தியாகராஜனிடம் சமீபத்தில் கேள்வி எழுந்தது
முந்தைய பாடலுக்கு அனுமதி கேட்கப்படுகிறதா என அவ்வப்போது கேள்வி எழுந்த நிலையில் வைரமுத்து பதிவு