தென்னிந்திய திரையுலகில் பிரபலமான ஜோடி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26ஆம் தேதி உதய்பூர் நகரில் நடைபெற உள்ளது. காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்காத இந்த ஜோடி, மிகவும் தனிப்பட்ட முறையில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் மிகச்சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் செல்போன்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த ஊடகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. புகைப்படங்கள் கசியாமல் இருக்க இந்த கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்தை முழுமையாக தனிப்பட்டதாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4ம் தேதி ஐதராபாத் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலகின் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
