விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரௌடி ஜனார்தனா’ தெலுங்கு படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நிலையில், க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் இளம் நாயகனான விஜய் தேவரகொண்டாவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் லட்சகணக்கான ரசிகர்கள் உண்டு. அதேபோல், தமிழ்நாட்டிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு கணிசமான ரசிகர்கள் உண்டு.
அவர்கள் அனைவரும் இந்த வீடியோவை இணையதளத்தில் விரும்பி பார்த்து வருகின்றனர்.
