Close Menu
    What's Hot

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»டீசலில் கலப்படம்! ரிப்பேரான கார்! ரூ 3 லட்சம் செலவு! பெட்ரோல் பங்கில் குமுறிய மாகாபா ஆனந்த்!
    சினிமா

    டீசலில் கலப்படம்! ரிப்பேரான கார்! ரூ 3 லட்சம் செலவு! பெட்ரோல் பங்கில் குமுறிய மாகாபா ஆனந்த்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025Updated:December 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MAKAPA3 file2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க.

    உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

    சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் இவர், பல்வேறு எஃப்.எம். ரேடியோக்களில் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய ஆனந்த், “சினிமா காரம் காபி” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

    இதற்கிடையே, “அது இது எது” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்குச் சென்றதால், அந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சி மாகாபா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது. இதையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சவுண்ட் பார்ட்டி, ஊ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.இவருக்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை ஊதியம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக அடிமை கட்சி தான்!. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!.
    Next Article மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு! நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம்
    Editor TN Talks

    Related Posts

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026

    100 வருடத்திற்கு பிறகு வரப்போகும் ஹாலிவுட் படம்..! ஆனால் 2015-லேயே உருவாகி விட்டதாம்..!

    February 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    மகா சிவராத்திரி விரதத்தை இவர்கள் எல்லாம் கடைப்பிடிக்கக்கூடாது!. விதிகள் என்ன தெரியுமா?

    Trending Posts

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.