கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று (நவ. 18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளநிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ம் தேதி உருவாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version