Close Menu
    What's Hot

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்..ஜனநாயகத்திற்கு எதிரான மத்திய அரசின் சதி- தவெக
    தேர்தல் 2026

    தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்..ஜனநாயகத்திற்கு எதிரான மத்திய அரசின் சதி- தவெக

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2025Updated:June 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 3 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கொண்டு வரப்படும் இந்தப் புதிய நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்! எனவே இது குறித்துத் தெளிவுபடுத்த, தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது..

    இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு..

    பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், கடந்த 24.06.2025 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம். ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision) என்ற ஒன்றைப் பீகாரில் முன்னெடுக்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் ஆவணங்களை, தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து. வாக்காளர் பட்டியலை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ‘இப்படிச் செய்வதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்: தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடியும்: வெளிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும்’ என்று இந்தியத் தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது.

    ஆனால், பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

    ஏனெனில், கடைசியாக பீகாரில் 2003-ஆம் ஆண்டுதான் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 22 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் பலவும் நடந்து முடிந்துவிட்டன. அப்போதெல்லாம் இதுபோன்ற ஒரு திருத்தத்தைச் செய்யாத தேர்தல் ஆணையம், இப்போது திடீரென மீண்டும் இந்தத் திருத்தத்தைக் கையிலெடுக்கக் காரணம் என்ன?

    இந்தச் சரிபார்க்கும் திட்டத்தின்படி. ஒரு சராசரிக் குடிமகனிடம் பிறப்புச் சான்றிதழோ. ரேசன் கார்டோ, ஆதார் அடையாள அட்டையோ அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணங்களில் எதாவது ஒன்று இல்லையென்றால், அதற்காகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் எழுப்புகிறார்கள். இது குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை.

    ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர். மீண்டும் உரிய ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால், அதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இப்படி மாநிலம் முழுவதும் இருந்து விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க. நீண்ட கால அவகாசம் தேவைப்படும் அல்லவா?

    பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற அரசு அலுவலகங்களை நாடிச் சென்றால் அங்கு, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதோடு மட்டுமல்லாமல். இது போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கான வேலைகள் முடிவடைய குறைந்தது மூன்று மாதங்கள் முதல், ஆறு மாதங்கள். ஒரு வருடம் எனப் பாமர மக்கள் அலைந்து திரிந்துதான் ஆவணங்களைப் பெறக் கூடிய சூழல் நிலவுகிறது.

    அப்படி இருக்கையில், நான்கு மாதங்களில் தேர்தலை வைத்துக்கொண்டு, நீண்ட கால அவகாசம் பிடிக்கும் இதுபோன்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையா? என்ற சந்தேகமும் எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக அல்ல.

    மேலும், இந்தப் புதிய நடைமுறை. வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீதே கைவைப்பது போல இருக்கிறது. ஏனெனில் அசாமில், இதுபோன்ற முறையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்தபோது, அதில் நடந்த குளறுபடிகள் விளிம்புநிலை மக்களை எப்படியெல்லாம் பாதித்தது என்பதை நாடு இன்னும் மறக்கவில்லை.

    நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறமென்றால், இன்னொரு புறம், இந்தத் திருத்தத்தின் பின்னால் ஏதும் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் உள்ளூர் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு தங்களுக்குச் சாதகமில்லாத. எதிர் மனநிலையில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2030-ல் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்திற்கு வழி- எ.வ.வேலு சொன்ன தகவல்..
    Next Article அரசு மருத்துவமனைகளில் 10 நாட்களில் 100% டாக்டர் பற்றாக்குறை இருக்காது
    Editor TN Talks

    Related Posts

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1943 கோடி நிதி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.