2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சமத்​துவ மக்​கள் கழகம்’ கட்சி நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.

தூத்​துக்​குடி மாவட்ட ‘சமத்​துவ மக்​கள் கழகம்’ கட்சி மற்​றும் நாடார் பேரவை சார்​பாக கிறிஸ்​து​மஸ் மற்​றும் புத்​தாண்டு விழா சமத்​துவ மக்​கள் கழகம் கட்சி அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. இவ்​விழா​வில் தமிழ்​நாடு பனைமரத் தொழி​லா​ளர் நலவாரிய தலை​வ​ரும், சமத்​துவ மக்​கள் கழக நிறுவன தலை​வ​ரு​மான எர்​ணாவூர் நாராயணன் கலந்துகொண்டார்.

பின்​னர் அவர் பேசும்​போது, “அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள தேர்​தலில் சமத்​துவ மக்​கள் கழகம் சார்​பில் கூட்​டணி கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி இரண்டு தொகு​தி​களை கேட்க உள்​ளோம். ஸ்ரீவை​குண்​டம் தொகு​தி​யில் நான் போட்​டி​யிடு​கிறேன். எனவே, இப்​போதே நாம் உழைக்க வேண்​டும்” என்​றார்.

இதுதொடர்​பாக கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் பி.எம்​.அற்​புத​ராஜ் கூறுகை​யில், “கடந்த தேர்​தலில் எங்​களுக்கு திமுக கூட்​ட​ணி​யில் சீட் ஒதுக்​க​வில்​லை. இம்​முறை நிச்​ச​யம் சீட் கிடைக்​கும்” என்​றார்.

ஸ்ரீவை​குண்​டம் தொகுதி திமுக கூட்​ட​ணி​யில் தொடர்ந்து காங்​கிரஸ் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது, அக்​கட்​சி​யின் ஊர்​வசி எஸ்​.அமிர்​த​ராஜ் எம்​எல்​ஏ-​வாக இருக்​கி​றார். இந்த நிலை​யில் ஸ்ரீவை​குண்​டத்​தில், தான் போட்​டி​யிடப் போவ​தாக எர்​ணாவூர் நாராயணன் தெரி​வித்​திருப்​பது காங்​கிரஸ் கட்​சி​யினர் மத்​தி​யில் கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக தூத்​துக்​குடி மக்​களவை தொகுதி காங்​கிரஸ் பொறுப்​பாளர் மகேந்​திரன் கூறுகை​யில், “இம்​முறை​யும் காங்​கிரஸ் கட்​சிக்​கு​தான் ஒதுக்​கப்​படும். தொகு​தி​யில் நிரந்​தர​மாக குடி​யிருக்​கும் நபருக்கே சீட் கொடுக்க வேண்​டும்” என்​றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version