Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»சட்டப் பேரவை தேர்தல்: பணப்பட்டுவாடாவை கண்காணிக்க களமிறங்கிய வருமான வரித்துறை
    தேர்தல் 2026

    சட்டப் பேரவை தேர்தல்: பணப்பட்டுவாடாவை கண்காணிக்க களமிறங்கிய வருமான வரித்துறை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ecc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கண்காணிக்க துவங்கியிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் எழுதிய ‘In service of the nation, reflection of bureaucrat’ என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேற்கு வங்காள ஆளுநர் நாராயணன் மற்றும் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஓய்வு பெற்ற தமிழ்நாடு டிஜிபிக்கள் சங்கர் ஜிவால் மற்றும் டிஜிபி ஏ.கே விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளரிடம் பேசிய வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் யாதவ், தான் எழுதிய புத்தகம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். குறிப்பாக, தனது 34 வருட ஐஆர்எஸ் அதிகாரியின் அனுபவம் குறித்தும், வருமான வரித்துறை குறித்தும், இந்திய குடியுரிமை பணி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் பிரதாப் சிங் யாதவ் இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து பேசினார். அப்போது, “ஒரு மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருந்தால் பணப்பட்டுவாடா நடப்பதை கட்டுப்படுத்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வருமான வரித்துறை கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியை வருமான வரித்துறை தொடங்கி இருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் 30 வருமான வரித்துறை ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருமான வரித்துறை கூடுதல் இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். வாரந்தோறும் ஆய்வு குறித்த அறிக்கைகளை தயார் செய்து சமர்ப்பித்து வருகின்றனர். குறிப்பாக, பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் தமிழகத்தில் உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    மத்திய புலனாய்வு அமைப்புகளுடனும், தமிழக போலீசாருடனும் இணைந்து இந்த கண்காணிப்பு பணிகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, மத்திய உளவுத் துறை, ஜிஎஸ்டி உளவுத் துறை ஆகிய அமைப்புகளையும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜிடிபி வளர்ச்சியில் கெத்து காட்டும் தமிழகம்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    Next Article ஈரோட்டில் 18ஆம் தேதி மக்களை சந்திக்கிறார் விஜய்… உறுதி செய்தார் செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    December 23, 2025

    தென் மாவட்டத்தில் தொகுதி வேண்டும்… கூட்டணிக்கு ஜான் பாண்டியன் நிபந்தனை

    December 23, 2025

    அதிமுகவில் விருப்ப மனு: இன்றே (டிச.23) கடைசி நாள்

    December 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.