2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வென்றாக வேண்டும் என்பதை இலக்காக வைத்து திமுக யுக்திகளை வகுத்து வருகிறது. அந்த வகையில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக 234 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

தொகுதிக்கு 7 நிர்வாகிகள் என அழைத்து அங்குள்ள கள நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். தேர்தல் வெற்றிக்கு எத்தகைய வியூகங்களை வைத்துள்ளீர்கள், தொகுதி மக்களிடம் கட்சியை பற்றிய அபிப்ராயம் என்ன? எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு என்ன பதில்கள் என்றெல்லாம் நுணுக்கமாக ஆய்ந்து வருகிறார்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். அதாவது சிவப்பு , ஆரஞ்சு , இளம் பச்சை , அடர்பச்சை என நான்கு நிறங்களில் சட்டமன்ற தொகுதிகளை பிரித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தை முன்னெடுக்கிறார். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அவை என்னவென்றால்,

சிவப்பு – கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்த தொகுதி, உட்கட்சி பிரச்சனை, தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி.

ஆரஞ்சு – கடுமையான போட்டி இருக்கும் தொகுதி, கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டிய தொகுதி.

இளம் பச்சை – வெற்றி பெரும் தொகுதி

அடர் பச்சை – நிச்சயம் திமுக வெற்றி பெறும் தொகுதி.

என நான்கு நிறங்களில் சட்டமன்ற தொகுதிகளை பிரித்து நிர்வாகிகளை அழைத்து மு.க..ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்டமாக சிவப்பு நிறத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்.

தங்களுக்கு முன் உள்ள சவால்கள் குறித்து மிக தெளிவான திட்டங்களுடன் திமுக தேர்தல் களத்தில் இறங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version