இந்திய அரசின் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்தும் வருடாந்திர கூட்டம், மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பதவியில் உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மே 23 ஆம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நிதி பங்கு, மத்திய நிதியளிப்பு, திட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக்-ல் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதை கண்டித்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் தெரிந்துகொள்ள: ”எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு..” முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்.. யார் அந்த தம்பி!!