முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்துவதற்கான அறிவுரைகள் கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
நியாயவிலை கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் மற்றும் கள நிலவரத்தை பொறுத்து, பகுதிகளுக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படும் நாட்களை தீர்மானித்துக் கொள்ளலாம்
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மண்டலங்களில் முதன்மை நியாய விலைக்கடைகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
பொதுவிநியோகத்திட்டப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்களை உரிய அரசு விதிமுறைகளை பின்பற்றி அமர்த்தப்பட உத்தரவு
வாகனங்களில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு தேவையான உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
தரமான கட்டுப்பாட்டுப் பொருட்களை சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்
