அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தபட உள்ளதாகவும், அதில் உங்களை கொலை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டு, கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட இடத்தில் ரூ.1கோடி பணத்தை வைக்கவேண்டும், இல்லை என்றால் மூன்று மாதத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்ய உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை புறநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version