டெட் தேர்வில் தகுத்தேர்வு மதிப்பெண் குறைப்பு, உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் சங்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வலுத்துள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவை போல் தமிழ்நாட்டிலும் உதவித் தொகை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலான மாத உதவித்தொகையை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த உதவித் தொகைக்காக பல ஆண்டுகளாக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பதாக வேதனையும் தெரிவித்தனர்.
