திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி காட்சி மூலம் நடக்கிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடந்து முடிந்த திமுக பொது குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை ஜூலை மாதம் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி வரக்கூடிய ஜூலை ஒன்றாம் தேதி முதலமைச்சர் ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை காண பணிகள் தொடங்க இருக்கிறது இதற்காக ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மாவட்ட செயலாளர் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு அணி செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.