Close Menu
    What's Hot

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!
    Featured

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?. முக்கிய அறிவிப்பு!

    Editor web3By Editor web3March 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Election Commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “நடைபெறவிருக்கின்ற, 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

    ஆதார் அட்டை,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,

    புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்;

    தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை;

    ஓட்டுநர் உரிமம்;

    வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card);

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை;

    இந்திய கடவுச்சீட்டு;

    புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்;

    மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்;

    பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும்

    இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.

    வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும். வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

    ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

    4.1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20A- இன்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது”.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏவுகணை தாக்குதலால் அமைதியற்ற துபாய்!. இந்தியா திரும்பிய சானியா மிர்சா உருக்கம்!.
    Next Article அரசியலில் முற்றுப்புள்ளி இல்லை; கார்கே, சரத் பவாரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
    Editor web3
    • Website

    Related Posts

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரிக்கும் வெப்பம்!. 2050-க்குள் ஆண்டுதோறும் 7 லட்சம் மரணங்கள் ஏற்படும்!. பகீர் எச்சரிக்கை!

    போர் பதற்றம்!. ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!.

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    தாக்குதலில் இருந்து தப்பிய ஜக் லாட்கி கப்பல்!. கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது!.

    Trending Posts

    திமுக – சிபிஐ ஒப்பந்தம்!. 5 தொகுதிகள் ஒதுக்கீடு! கூடுதல் இடங்களுக்காக மல்லுக்கட்டும் CPM!.

    March 18, 2026

    விஜய் – சங்கீதா பிரிவுக்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்?. ஜோஸ் சார்லஸின் பரபரப்பு வீடியோ!

    March 18, 2026

    EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!. இந்தூரில் பயங்கரம்!.

    March 18, 2026

    அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!, குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. டெல்லியில் பயங்கரம்!.

    March 18, 2026

    திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது!. ‘குறைவான இடங்களை ஏற்க முடியாது என திட்டவட்டம்!.

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.