முதலமைச்சரான பிறகு விஜய் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் 30 ஆண்டுகால கோரிக்கையை பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளார்.

முதலமைச்சரின் தொகுதியான பெரம்பூரில் பள்ளிக்கூடத்துக்கு முறையான வழியில்லாததால் குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் முதலமைச்சரின் சட்டமன்ற அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே 30 அடி அகலத்தில் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 15 தெருக்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தை எளிதில் அணுகுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த வழி, இப்போது சரி செய்யப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version