Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி”: எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
    Featured

    “அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி”: எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025Updated:May 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250527 WA0024
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கவுன்சிலர் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அரக்கோணம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் தாயார் திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    பழனிசாமியின் குற்றச்சாட்டுகள்

    அனுமதியின்றி துப்பாக்கிகள்: அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மாணவிக்கு மிரட்டல்: அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக கண்ணீருடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

    காவல்துறை மீது குற்றச்சாட்டு: திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றி, பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு துன்புறுத்துவதாகவும், புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுவதாகவும், திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுவதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி இல்லாத துப்பாக்கி இருப்பதையும், போதை இளைஞர்களிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, தற்போது சர்வ சாதாரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவே “ஸ்டாலின் மாடல் அலங்கோல ஆட்சி” என்றும் விமர்சித்தார்.

    திமுக மீது கேள்வி: குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துவதையும், “ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு – காக்கப்படுகிறதா? அப்படியெனில், #யார்_அந்த_SIR ?” என்றும் பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    நீதிக்கான போராட்டம்

    பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை தங்கள் கேள்விகள் ஓயாது என்றும், திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்பதற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்றும் பழனிசாமி கேட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும், ஆனால் இந்த ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் – குறிப்பாக திமுகவினரிடம் இருந்து என்றும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    Edapadi edapadi palanisami EPS
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆண்களுக்கும் இலவச டிக்கெட்… போக்குவரத்து கழக சங்கள் நூதன போராட்டம்…
    Next Article தமிழ்நாடு அரசின் நகராட்சிப் பத்திரங்களை வாங்கலாமா? வேண்டாமா? விரிவான தகவகள் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    February 18, 2026

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    February 18, 2026

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.

    தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

    “அந்த திமிர்தான் காரணம்”!. தொடர் தோல்வியில் ஆஸி!. டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது!.

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.