பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ‘I’ மற்றும் ‘J’ பிரிவுகளில் நார்வே, அல்ஜீரியா அணிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

இன்று நடைபெற்ற I பிரிவு ஆட்டத்தில் நார்வே மற்றும் செனகல் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இந்த ஆட்டத்தின் முழுநேர முடிவில், நார்வே அணி 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த செனகல் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘J பிரிவு ஆட்டத்தில் ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஜோர்டான் அணி 1 கோல் அடித்து முன்னிலையில் இருந்தபோதிலும், ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்த அல்ஜீரியா அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றியது. இறுதியில், 2-க்கு 1  என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி அல்ஜீரியா அணி மாஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version