பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை மெக்ஸிகோவில் தொடங்குகிறது. 3 நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன.

கால்பந்து ரசிகர்களின் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி.

அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி ஜூன் 11 ஆம்தேதி (நாளை) தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டி மெக்ஸிகோவில் உள்ள மெக்ஸிகோ சிட்டி ஸ்டேடியத்திலும், இறுதிப் போட்டி நியூயார்க்கில் உள்ள நியூ யார்க்/நியூ ஜெர்ஸி ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது.

அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகளைச் சேர்ந்த 16 நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. அமெரிக்காவி 11, மெக்ஸிகோவில் 3, கனடாவில் 2 நகரங்களில்  போட்டிகள் நடக்க உள்ளன.

கனடாவில் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை. அதேபோல் அமெரிக்காவில் 2 வது முறையும் மெக்ஸிகோவில் 3-வது முறையும் இந்தப் போட்ட நடத்தப்பட உள்ளது.

இந்த முறை நடைபெறும் போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆங்கில வரிசைப்படி, Group A  முதல் Group L வரை பிரிக்கப்பட்டுள்ளன.  ஒரு குரூப்புக்கு 4 அணிகள்  என 12 குரூப்புகள் உள்ளன.

Group A   – மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, செக்கியா (செக் குடியரசு)

Group B  – கனடா, போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினா, கத்தார், ஸ்விட்சர்லாந்து

Group C   – பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து

Group D – அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கியா

Group E – ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்

Group F – நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனிசியா

Group G – பெல்ஜியம், எகிப்து, இரான், நியூசிலாந்து

Group H – ஸ்பெயின், கேப் வெர்டே, சௌதி அரேபியா, உருகுவே

Group I – பிரான்ஸ், செனகல், இராக், நார்வே

Group J – அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டன்

Group K – போர்ச்சுகல், டி.ஆர்.காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

Group L – இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

ஒவ்வொரு அணிகளும் தமக்குள் மோதிக் கொண்டபின் அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தடுத்த அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குரூப் சுற்றில் 72 போட்டிகள், நாக் அவுட் சுற்றில் 32 போட்டிகள் என மொத்தம் 104 போட்டிகள் இந்தத் தொடரில் நடக்கும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version