5 மாநில தேர்தலுக்குப் பின்னர் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்பட 23க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டணியாக இது இருந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பின்னர் இக்கூட்டணிக்குள் கருத்துவேறுபாடுகள் நிலவியது. அண்மையில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னர் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது.

இந்தியா ஜன்பந்தன் என்னும் பெயரில் நடைபெறும் இக்கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில கட்சிகள் தங்கள் சொந்த காரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஏற்றப்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு காங்கிரஸ் துணை போனதால், அதிருப்தியில் உள்ள திமுக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இதே போல் ஆம் ஆத்மி கட்சியில் கூட்டத்த்ல் பங்கேற்கவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version