ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்திடம் தொடரை இழந்ததன் காரணமாக தனது முதலிடத்தை இழந்திருந்த இந்திய அணி, தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நடப்பு டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. குறிப்பாக, இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்திற்கான தேவையான புள்ளிளைப் பெற்றுள்ளது. அதாவது, இதுவரை 60 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 16,088 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தத் தொடரின் வெற்றிகரமான நிறைவை எட்டுகின்ற வகையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட உற்சாகத்தில் இருக்கும் இளம் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தைத் தொடர தீவிரம் காட்டி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version