Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல… இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..
    Featured

    அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல… இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

    சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்டனையை ரத்து செய்யக்கோரிய அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது.
    மேலும் தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரான சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர் ஆவார், அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு நீதிபதிகள், இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது.

    ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்.

    மேலும், இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறினர்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும் என மீண்டும் கோரினார்.

    ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம் , எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    asylum re India asylum policy India not an asylum country India refugee policy 2025 Indian refugee law Sri Lankan Tamil refugees Sri Lankan Tamils in India Supreme Court asylum verdict Tamil refugee plea rejected
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!
    Next Article தென்மேற்கு பருவமழை.. .24 மணி நேரமும் அவசர மையங்கள் … முதலமைச்சர் அறிவுறுத்தல்!!
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.