அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், நடப்பு சேம்பியன் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

ஐபிஎல் 2026 இன் இறுதிப் போட்டியில் பெங்களூரு மற்று குஜராத் அணிகள் மோதின. அகமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், பௌலிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து பேட்டிங்குக்காக களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் தொடக்கத்திலேயே அணிக்கு அதிர்ச்சியை அளித்தனர். சுப்மன், 10 ரன்கள் எடுத்த நிலையில், ஹேசல்வுட்டின் பாலை புல்ஷாட் அடிக்க, பெங்களூரு கேப்டன் ரஜத் படித்தார் அதைக் கேட்ச் செய்து, சுப்மனை வெளியேற்றினார்.

அடுத்து, புவனேஷ்வரின் பவுன்சர் பந்தை சுதர்சன் தொட்டு வைக்க, அதனை கீப்பர் ஜிதேஷ் சர்மா பிடித்து விட, 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் சுதர்சன். 3.4 ஓவர்களில் 26 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய குஜராத் அணியில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்காமல் போயினர்.
இதனால், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலியும் வெங்கடேஷ் ஐயரும் அதிரடித் துவக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். இருவரும், 4, 6 என அடுத்தடுத்து விளாச அரங்கம் அதிர்ந்ததோடு, ரன் எண்ணிக்கையும் அதிகரித்தது. சிராஜ் பந்தில் வெங்கடேஷ் ஆட்டமிழந்தார். 16 பந்துகளை சந்தித்த அவர் 32 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒருபுறம் கோலி நங்கூரம் போல் நின்று ரன்களை ஸ்கோர் செய்ய 25 பந்தில் அவர் அரைசதத்தை எட்டியிருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 18 ஓவரில் 5விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன் எடுத்து வென்றது. கோலி இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியைக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம், ரூ. 20 கோடி பரிசு கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு, பணப் பரிசு அளிக்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ. 13 கோடி பரிசு கிடைத்தது.

இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் அசத்தியதோடு, தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பெங்களூரு அணி கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. முன்னதாக இதே வரிசையில் சென்னை (2010, 2011) மற்றும் மும்பை (2019, 2020) அணிகளும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version