Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.
    Featured

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    Editor web3By Editor web3March 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியத் திரையுலகின் ‘கனவுக்கன்னி’யாக இரு தசாப்தங்களுக்கும் மேலாக வலம் வரும் நடிகை த்ரிஷா, தற்போது சினிமாவை விட்டு விலகப் போவதாகத் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்து மைல்கல் சாதனை படைத்துள்ள த்ரிஷா, கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவெளியை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது த்ரிஷாவின் கைவசம் ‘கருப்பு’ உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ரிலீஸுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளன. இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் புதிய கதைகளைக் கேட்க ஆர்வம் காட்டவில்லை என்றும், படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு முன்னணி நடிகை தனது உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே இத்தகைய முடிவை எடுப்பது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    த்ரிஷாவின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். சமீபகாலமாக அவர் தமிழக அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் இணையவோ அல்லது  விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படவோ வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து த்ரிஷா தரப்பிலிருந்தோ அல்லது அவரது குடும்பத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசோசியல் மீடியாவில் அரசியல் விளம்பரங்களுக்கு கிடுக்கிப்பிடி!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
    Next Article தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.