மக்கள் பிரச்சனைக்காக அரசுக்கு எதிராக தொடர்ந்து நான் குரல் கொடுத்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் புதிய கலை கல்லூரி துவக்க விழாவில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
உங்கள் மீது கூறப்பட்டிருக்கிற குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் உங்களை கண்டித்து இருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அரசுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகிறேன. இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக சம்பந்தமே இல்லாமல் என்னை சிக்க வைத்துள்ளார்கள். உயர்நீதிமன்றமும் சில கருத்துக்களை சொல்லி உள்ளது நீதிமன்றத்தை நம்புகின்றோம். நீதிமன்றத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். நான் என்ன தீவிரவாதியா அல்லது பயங்கரவாதியா ஊழல் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது காவல்துறை.
எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற நெருக்கடி கொடுத்தால் கூட்டணிக்கு வந்து விடுவேன் எதிர்க்கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்ற எண்ணங்களில் தான் இது செய்கிறார்கள். எப்போது இருந்தாலும் நியாயம் உண்மை வெளிப்படும். கண்டிப்பாக நாங்கள் சட்டத்தை கட்டுபட்டவர்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம்.