Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் பிளவு!. 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!. புதுச்சேரியில் பரபரப்பு!

    115 வேட்பாளர்களுக்கும் அவசர அழைப்பு!. ரீ-செக் செய்யும் விஜய்?.

    வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலையில் மெகா சரிவு!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து அதிரடி!
    தமிழ்நாடு

    தங்கம் விலையில் மெகா சரிவு!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து அதிரடி!

    Editor web3By Editor web3March 23, 2026Updated:March 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold march 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

    அண்மைக் காலமாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று (மார்ச் 23) அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால், உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிவைச் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 வரை குறைந்துள்ளது.

    நேற்று முன்தினம் சனிக்கிழமை தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றைய தினம் ரூ 2640 சரிந்தது, ரூ.1,08,960-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620க்கு விற்பனையானது.

    இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,03,600 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000-ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் சரிவு நடுத்தர வர்க்கத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235க்கும் கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.2,35,000க்கும் விற்பனையாகிறது.

    சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவது போன்ற காரணங்களே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையைச் சரிப்பது இதுவே முதல்முறை என்பதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!
    Next Article புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்!. 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு!. அதிருப்தியில் மகளிர் அமைப்புகள்?
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் பிளவு!. 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!. புதுச்சேரியில் பரபரப்பு!

    March 23, 2026

    115 வேட்பாளர்களுக்கும் அவசர அழைப்பு!. ரீ-செக் செய்யும் விஜய்?.

    March 23, 2026

    புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்!. 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு!. அதிருப்தியில் மகளிர் அமைப்புகள்?

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் பிளவு!. 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!. புதுச்சேரியில் பரபரப்பு!

    115 வேட்பாளர்களுக்கும் அவசர அழைப்பு!. ரீ-செக் செய்யும் விஜய்?.

    வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!

    புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்!. 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு!. அதிருப்தியில் மகளிர் அமைப்புகள்?

    தங்கம் விலையில் மெகா சரிவு!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து அதிரடி!

    Trending Posts

    திமுக கூட்டணியில் பிளவு!. 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!. புதுச்சேரியில் பரபரப்பு!

    March 23, 2026

    115 வேட்பாளர்களுக்கும் அவசர அழைப்பு!. ரீ-செக் செய்யும் விஜய்?.

    March 23, 2026

    வங்கதேசத்தில் கோர விபத்து!. பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு!

    March 23, 2026

    புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல்!. 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு!. அதிருப்தியில் மகளிர் அமைப்புகள்?

    March 23, 2026

    பயங்கரவாத பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம்!. ஜிடிஐ அதிர்ச்சி ரிப்போர்ட்!

    March 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.