உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதி, ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது.
ரஷ்ய அதிபர் புதினை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அணுகுண்டு வீச தயங்க மாட்டோம் என கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்ய மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான மெத்வதேவ் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், மாஸ்கோ அருகேவுள்ள புதினின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒரு தகவலும், ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதை உக்ரைன் மறுத்த போதிலும், பதிலடித் தாக்குதல் இலக்குகளை தேர்வு செய்து விட்டதாகவும், இந்த பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதியும் ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது. அப்படித் தாக்குதல் நடத்தினால் ஐரோப்பா கண்டத்தில் கடுமையான பேரழிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், அவசரம் அவசரமாக உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதேபோல், ரஷ்ய அதிபர் புதினுடனும் தொலைபேசி வாயிலாக டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.
2-ம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பல லட்சம் பேர் மாண்டனர். பல லட்சம் பேர் பலத்த காயமடைந்தனர். அதன்பிறகு இதுவரை எந்த நாடும் அணுகுண்டு தாக்குதலை நடத்தியது இல்லை.
