உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணிப் போடும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு லீக் சுற்றிலும், ஒவ்வொரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் காண்பித்தன. லீக் சுற்றுகள் முடிந்து 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன். அந்த வகையில் இன்று நடைபெற்ற 84-வது போட்டியில், போர்ச்சுக்கல் மற்றும் குரோஷியா அணிகள் மோதின.

கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். எனினும், கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக மல்லுக்கட்டின. அப்போது ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து தாக்குதல் ஆட்டத்தை போர்ச்சுகல் தீவிரப்படுத்தியநிலையில், ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலை ஏற்படுத்தினார். இதையடுத்து 2-வது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடின.

90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால், கூடுதலா 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நிமிடங்களினி 4-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் விரர் கொண்ட்சாலோ ராமோஸ் அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதையடுத்து குரோஷியாவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியது. போர்ச்சுகலுக்கு எதிராக தோல்வியடைந்த குரோஷியா நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றியை கடந்தாண்டு இதேநாளில் கார் விபத்தில் உயிரிழந்த போர்ச்சுக்கல் வீரர் டியாகோ ஜோட்டாவின் ஜெர்சியை அணிந்து, சமர்ப்பித்தார் ரொனால்டோ.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version