Author: Editor web4

வேலூர்மாவட்டம், கேவிக்குப்பம் அருகே ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள காங்குப்பம் பகுதிக்கு நேற்று நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தது. விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துரையினர்,   பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனபகுதிகளுக்குள் துரத்தினர். ஆந்திர பகுதியிலிருந்து அடிக்கடி காட்டு யானைகள் கிறிஸ்டியான்பேட்டை, லத்தேரி, பனமடங்கி, பேர்ணாம்பட்டு  போன்ற பகுதிகளில் தொடர்ந்து உலா வருவதுடன் பயிர்களை சேதப்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Read More

வாணியம்பாடியில் மது போதையில் ஓசியில் டீக்கடையில் சிகரெட் கேட்டு ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் அன்பு என்பவர் டீக்கடை மற்றும் சில்லறை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று கடைக்கு மது போதையில் வந்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த பொன்முடி என்பவர் கடையில் இருந்த ஊழியரிடம் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளார். கடையில் இருந்த ஊழியர் கொடுக்க மறுத்ததால் மது போதையில் இருந்த பொன்முடி கடையில் இருந்த கண்ணாடி பாட்டில் மூடியை எடுத்து வீசி எறிந்ததில் கடை ஊழியர் கைப்பகுதியில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவருக்கு, வாணியம்பாடி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற வாணியம்பாடி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு மதுபோதையில்…

Read More

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read More

பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழநி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக…

Read More

சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்ட்-டை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னையில் 2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கை ஆறு மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்…

Read More

அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தொடரின் கடைசிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொண்டார். பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர். இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ராபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜவோகிர் சிண்டாரோவ் 2ஆம் இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார். இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம்…

Read More

பாஜக ஆளும் மாநிலங்களில் மருத்துவம், போக்குவரத்து மக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் என பாஜக தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்ளும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து வெளியாகும் வீடியோக்கள் அந்த கூற்றை பொய்யாக்கி உள்ளது. அந்த வகையில், பாஜகவின் சமரத் சௌத்ரி ஆளும் பீகாரில் சுகாதாரம், போக்குவரத்து என பலவற்றிலும் வசதி சரிவர இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பிகார் மாநிலத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு, பிளாஸ்டர் அல்லது மருத்துவக் கட்டுக்குப் பதிலாக அட்டைப்பெட்டியை வைத்து கட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகுசராய் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட இளைஞருக்கு, அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

Read More

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துறை பகுதியில் உலா வந்த இரண்டு யானைகளின் சிசிடிவி காட்சிகள் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதே பகுதியில் யானைகள் உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் யானைகள் நடமாட்டத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கணியம் வயல் கிராமப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் உலா வந்த யானையிடமிருந்து வெவ்வேறு நாட்களில் மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர் இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வனத்துறையினரின் வாகனத்தின் மிக அருகே வந்த யானை மெதுவாக நடந்து சென்றது இதனால்…

Read More

தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் கும்பல் ஆவணங்கள் இல்லாமல் பல்வேறு பொருட்களை கடத்தி வருகின்றன இதை தடுக்க க்யூ பிரிவு காவல் துறை மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி அருகே உள்ள அண்ணா காலனி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அண்ணா காலனி கடற்பகுதியிலிருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு 8 வெள்ளாடுகள் மற்றும் நான்கு பெட்டிகளில் புறாக்கள் ஆகியவை கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடு மற்றும் புறாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைபர்படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி…

Read More

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி 1905 ஆகஸ்டு 7-ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதை நினைவுபடுத்துதல், கைத்தறி பொருட்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக 2015 ஆகஸ்டு 7-ம் தேதி முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய இளைஞர்கள் கைத்தறி ஆடைகளை கொண்டு வீடியோக்களை உருவாக்கி, தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மேலும் 1905ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 7-ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுவு சிறப்பையும் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அந்த நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக…

Read More