தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
முதல்முறை கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுகு அறிவுறுத்தப்பட்டதோடு, அது தொடர்பாக அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.
இன்று 2-வது முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தாக்கலின் போது அறிமுகப்படுத்த உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் புதிதாக செயல்படுத்தப்பட உள ஒவ்வொரு திட்டத்திற்கு வெற்றி தமிழகம் என்ற பெயர் சூட்டவுள்ளதாகவும் அதற்காக இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எண்ணூரில் தொடங்கி செங்கல்பட்டு , ஈசிஆர் உள்ளிட்டவைகளை இணைக்கும் வெளிவட்ட சாலையை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் நிர்வாக ரீதியாக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தலும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது..
