சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். நாட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று சிலர் ‘சோஃபா’ வந்தவுடன் நம்மை விட்டு சென்றிருக்கலாம். ஆனால், நீங்கள் அனைவரும் திமுகவுடன் இருப்போம் என்ற உறுதியோடு இங்கு வந்துள்ளீர்கள்” என்றார்.
மேலும், “இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவை யார் வந்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து மாநிலத்தை திமுக நிச்சயம் மீட்டெடுக்கும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

