நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடும் வகையில் அதன் அமைப்பாக ஒன்றிய திட்டக்குழு என்பது செயல்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் திட்டக்குழு என்பது முழுமையாக கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தின் பத்தாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது . இதைத்தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டம் இன்று இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதாவது காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் முதல் கட்டமாக இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி முதல் இரண்டாவது கட்டமாகவும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை, பள்ளிக் கொள்கை, கல்வி, அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த பத்தாவது நிதி ஆயோக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பிற்பகல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் இருவரையும் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்பொழுது சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் அரசியல் ரீதியாகவும் சில ஆலோசனைகள் மேற்கொண்டு உள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சர், டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே பெஹல்காம் தீவிரவாதிகளில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லி சாணக்கியாபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை காலை பிரதமர் தலைமையில் பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 10வது கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

அக்கூட்டத்தின்போது, தமிழ்நாடு சார்பாக பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார், குறிப்பாக நிலுவையில் உள்ள கல்விக்கான நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி, வெள்ள பாதிப்பு மற்றும் பேரிடர் நிதி, உள்ளாட்சிக்கான நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி ஆகியவற்றை, உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version