தென்னிந்தியாவின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று வாணியம்பாடி பிரியாணி. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் பலரின் விருப்பமான உணவாக மாறியுள்ளது. இந்த பிரியாணியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன்
  • பாஸ்மதி அரிசி
  • எண்ணெய்
  • வெங்காயம்
  • இஞ்சி
  • பூண்டு
  • தக்காளி
  • தயிர்
  • முழு கரம் மசாலா
  • கொத்தமல்லி இலை
  • புதினா இலை
  • மிளகாய் தூள்
  • பச்சை மிளகாய்
  • உப்பு

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய் போன்ற முழு கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து, இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது, மட்டன் சேர்த்து, மட்டனில் உள்ள தண்ணீர் வெளியேறும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து, மட்டனுடன் நன்றாக கலந்து வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.

தயிர் சேர்த்து, கலவையை நன்றாக கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, ஒரு முறை கிளறி விடவும். மட்டன் 90% வெந்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசி 60% வேகும் வரை கொதிக்க விடவும். பிரியாணியை தம் போடுவதற்கு, பாத்திரத்தின் மூடியை போட்டு, அதன் மேல் எரியும் கரி அல்லது விறகுகளை வைக்கவும்.

சுமார் 20 நிமிடங்கள் தம்-ல் வைத்த பிறகு, அடுப்பை அணைக்கவும். தம் திறந்த பிறகு, பிரியாணியை மெதுவாக கிளறி, சூடாக பரிமாறவும்.

Share.
Leave A Reply

Exit mobile version