தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு, சின்னம் ஒதுக்குதல், கூட்டணி பேச்சுவார்த்தை என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகலம் சூடுபறக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையும், அதன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிட இருப்பதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இவர் இரைட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
