ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுகள் நாளை (மே 26) முதல் தொடங்குகின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

குவாலிஃபையர் 1-ல் தோல்வியடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ‘குவாலிஃபையர் 2’-ல் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 27எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன

இந்த சீசனின் சாம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version