தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பெற்றோர் – ஆசிரியர்கள் குறித்து பேசுங்கள் என்றும் மாணவர்களை நடிகரும் தவெக தலைவருமான விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை நேரில் அழைத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார்.
முதல்கட்டமாக கடந்த 30-ந் தேதியும், கடந்த 4-ந் தேதி இரண்டாம் கட்டமாகவும் இந்த விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவு விருந்தளித்து பாராட்டினார். இதன் மூன்றாம் கட்ட விருது விழா, இன்று (13/6/25) மாமல்லபுரத்தில் ஷெரட்டன் ஓட்டலில் நடைபெறுகிறது.
என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் – விஜய் வேண்டுகோள்#VIJAYHonorsStudents#தமிழகவெற்றிக்கழகம் #thalapathyvijay #thalapathy #vijay #viral #tvk@TVKVijayHQ pic.twitter.com/88r4sc6CYH
— TNTalks (@tntalksofficial) June 13, 2025
இதில் செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசிஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 32 சட்டமன்ற தொகுதிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது பேசிய விஜய், தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பெற்றோர் – ஆசிரியர்கள் குறித்து பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
