பழங்குடியினர் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்ற மாவோயிஸ்ட்டுகளுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் நடைபெற்ற கிசான் சம்மேளனத்தில் உரையாற்றிய அவர், இடதுசாரி தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை மாவோயிஸ்டுகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதியை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை!
தெலங்கானா மாநிலத்தை, மாவோயிஸ்ட்டுகளின் கூடாரமாக மாற அனுமதிக்க வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.