தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.