பிரபல நடிகை ஆமணி, பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழில் புதிய காற்று, தீச்சட்டி கோவிந்தன், முதல் சீதனம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஆமணி. இவர் தமிழ், கன்னடத்தைவிட தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த இவர், 1992-ல் திரைப்பட துறையில் அறிமுகமானார். ஆந்திராவின் உயரிய நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பாஜக தலைமையகத்தில் மாநிலத் தலைவர் ராம்சந்தர் ராவ் முன்னிலையில் பாஜகவில் இணந்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உடனிருந்தார். பிரதமர் மோடியின் திறமையான ஆட்சியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாக ஆமணி தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version