கடன் மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் மகனிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துக்கு யெஸ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.6,000 கோடி கடன் வழங்கியது.
ஒரே ஆண்டில் இத்தொகை ரூ.13,000 கோடியாக உயர்ந்தது. இதில் பெரும்பாலான தொகை வராக் கடனாக மாறியது. இதனால் யெஸ் வங்கிக்கு ரூ.3,300 கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில் அவரது மகன் அன்மோல் அம்பானியிடம் (34) வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது.
